தமிழ்நாடு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்

top-news

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) பணிகளில் தமிழக மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு அடிப்படையாக அமையும் மிக முக்கியமான தேசியப் பணியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு வரும்போது, பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்கி, அவர்களின் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை துல்லியமாக வடிவமைக்க உதவும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

மேலும், மக்கள்தொகை விவரங்கள் கல்வி, சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, வேலைவாய்ப்பு, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசின் திட்டமிடலுக்கு முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் பொறுப்புணர்வுடன் கணக்கெடுப்பில் பங்கேற்று, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.